ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு சென்றிருக்கிறார்.
ஆல்யா மானசா:
நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அதே சீரியல் ஹீரோ சஞ்சீவி காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர். அவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா பிரசவத்திற்காக அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
புது சீரியல்:
தற்போது ஆல்யா மானசா மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறார் என கடந்த சில வாரங்களாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அந்த சீரியல் சன் டிவியில் தான் வரப்போகிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த அவர் திடீரென தற்போது சன் டிவிக்கு தாவி இருப்பது ஏன் என சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாக ஆகி இருக்கிறது.


