சர்ச்சை நாயகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாணி போஜன்..

 வாணி போஜனுக்கு: 

 நல்ல நடிப்பு திறமை இருந்தும் சினிமா வளர முடியாமல் தவித்து வருகிறார். ஆரம்பத்தில் இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் இவரை நாடி வந்தது. தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.



இந்நிலையில் நல்ல பட வாய்ப்புகள் தொடர்ந்து வாணி போஜனுக்கு வந்தும் அதை நிராகரிக்க சர்ச்சை நாயகன் ஒருவர்தான் காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் வாணி போஜன் எங்கு சென்றாலும் அந்த நடிகர் அவரை பின்தொடர்ந்த வருகிறாராம்.

ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸில் வாணி போஜன் உடன் இணைந்து ஜெய் நடித்திருந்தார். அப்போது ஜெய் மற்றும் வாணி போஜன் இடையே நட்பு உருவாகி பழக ஆரம்பித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருவரும் இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது.

ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய ஜெய் அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார். அப்போது உச்சத்தில் இருந்த அஞ்சலியின் மார்க்கெட் இழக்க ஜெய் தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு இவர்களுக்குள் ஏதோ ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது வாணி போஜன் உடன் ஜெய் பழகி வருகிறார். எங்கு சென்றாலும், ஹோட்டலுக்கு சென்றாலும், கதை கூற இயக்குனர்கள் சென்றாலும் வாணி போஜனை ஜெய் பின்தொடர்ந்து வருகிறாராம். இதனால் கதை சொல்லும் இயக்குனர்கள் ஜெய் அருகில் இருப்பதால் கதை சொல்ல முடியாமல் திரும்பி வருகிறார்கள்.




Post a Comment

Previous Post Next Post