இப்படியெல்லாம் ஒரு திருமண அழைப்பிதழா😲 மிரண்டு போன உறவினர்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்க உள்ள திருமணத்திற்காக அச்சிடப்பட்ட புது வித அழைப்பிதழ்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம். அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் திருமணம் செய்கிறார்கள்.
சிலரோ திருமண அழைப்பிதழில் இருந்து தங்கள் கிரியேட்டிவிட்டியை புகுத்தி விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
இந்தியா:
இந்தியாவில் பலரது வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு. திருமணத்தில் நம்மைச் சுற்றி உள்ள நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். கள்ளக்குறிச்சியில் திருமணத்திற்காக அடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று இப்போது இணையதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
அழைப்பிதழ்:
சற்று நையாண்டித் தனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் மேல் 'என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா' என்று அச்சிடப்பட்டு உள்ளது. கேள்வி, பதிலைப் போல மாப்பிள்ளை மற்றும் மணமகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. இருவரையும் ஹீரோ மற்றும் ஹீரோயின் எனக் குறிப்பிட்டுள்ளனர். அது சரி..! அன்று எத்தனை பேரும் வந்தாலும் இவர்கள் தானே ஹீரோ -ஹீரோயின்!
துன்பப்பட்டு, துயரப்பட்டு!
திருமண நாள், இடமும் கேள்வி பதிலைப் போலவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்குக் கீழே, 'Monday-ல வச்சிருகிங்க கண்டிப்பா வரனும். எப்படியாவது Monday லீவு போட்டு துன்பப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு Buso, traino, flighto புடிச்சு வரனும்னு சொல்ல மாட்டேன். நீங்க வரலேனா எங்களுக்கு சோறு மிச்சம்.. இருந்தாலும் நீங்கக் கண்டிப்பா வந்து சேந்துருங்க' என்று கூறப்பட்டு உள்ளது.
வந்தா மட்டும் போதும்:
என்னப்பா சாப்பாடு? ஓடுரது, தாவுரது, நடக்கரது, பறக்கரது, இதையெல்லாம் போடனும்னு எங்களுக்கும் ஆசைதான்.. ஆனால், Non veg போட கூடாது அதனால் veg மட்டும் தான் என்று போட்டுள்ளார்கள். அதற்கு கீழ் கிப்ட் இடத்தில் நீங்கள் அன்போடு நகைய கொடுத்தாலும் சரி, பாசத்தோடு பணத்த கொடுத்தாலும் சரி, எத கொடுத்தாலும் வாங்கிக்கோனு மனசு சொல்லுது. ஆனால் நீங்க வந்தா மட்டும் போதும் என்று வித்தியாசமாக அழைத்து உள்ளனர்.
சரக்கு:
அதற்குக் கீழே போட்டிருப்பது தான் ஹைலைட். எல்லாம் சரி.. சரக்கு உண்டா என்ற கேள்விக்கு, 'அய்யோ சரக்கா!!! குடி குடியைக் கெடுக்கும் கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும்' என்று நகைச்சுவையாக அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

.jpeg)

.jpeg)
.jpeg)