சமந்தா விவாகரத்துக்கே இதுதான் காரணம்..😯

 சமந்தா விவாகரத்துக்கே இதுதான் காரணம்.. நாக சைதன்யா குடும்பத்தை பற்றி கூறிய பிரபல பாடகி.. 


தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாகவும் சர்ச்சை பிரபலமாகவும் திகழ்ந்து வருபவர் சின்மயி. மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்தில் முக்கிய பாடலை பாடி பிரபலமானார் சின்மயி.




இதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பாடி வரும் சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரும் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரகுமான் முதல் சமந்தா விவாகரத்து வரை அவர் பேசிய விசயங்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


நான் பாடிய தெய்வம் தந்த பூவே பாடல் பாடும் போது மணிரத்னம், ஏ ஆர் ரகுமான் யார் என்றே தெரியாது. அவர்களை பார்த்ததும் கிடையாது. அந்த பாடலை எழுதிய கவிஞரை கூட எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அப்பாடலுக்கு பிறகு ஓஹோன்னு வருவேன் என்று எதிர்ப்பார்த்தேன்.




ஆனால் 2 வருஷமாக சும்மாதான் இருந்தேன் என்று தெரிவித்தார். மேலும் நடிகை சமந்தா விவாகரத்து பற்றி பேசுகையில், திருமணத்திற்கு பிறகு சமந்தாவுக்கு உறுதுணையாக இருந்ததே கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான். ஆனால் கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது தான் பெரிய பிரச்சனை.


இதனால் குடும்பத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதன் ஒரு காரணம் தான் சமந்தாவின் விவாகரத்துக்கு பெரிய புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.




சமந்தா வாழ்வில் கடந்ந்து வந்த பாதியில் தன்னம்பிக்கை, தையரிம் தான் அவர் இந்த இடத்தில் நிற்க காரணம் என்றும் விரையில் பல விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு என்று கூறியுள்ளார் சின்மயி.

Post a Comment

Previous Post Next Post